டேக் ஆப் ஆன் ‘மரகத நாணயம் 2’
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ படத்தின் 2ம் பாகம் ஷூட்டிங் தொடங்கி உள்ளது.சென்னையில் துவங்கிய இந்த ஷூட்டிங்கை நடிகர் கார்த்தி கிளாப்போர்டு அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்ஷன்’ என சொல்லி துவக்கி வைத்தார். பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் பிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்குகிறார். இதில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் லீடு ரோலில் நடித்துள்ளனர்.மேலும் சத்யராஜ்,நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர்.
Prev Post
Next Post