Take a fresh look at your lifestyle.

அரை சதத்தை நெருங்கும் சூர்யா

97

அரை சதத்தை நெருங்கும் சூர்யா
ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவரின் 45 வது படமாகும். அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தையும் முடித்துள்ளார்.தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 47வது படமாகும். அதோடு தனது 48வது படத்திற்காக பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளார்.இந்த நிலையில் சூர்யாவின் 50வது படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்க, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கடைசி இரண்டு படங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.