Take a fresh look at your lifestyle.

மகேஷ்பாபு படத்தில் தீபிகா படுகோனே

95

மகேஷ்பாபு படத்தில் தீபிகா படுகோனே
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை களத்தில் ராமாயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.