எஸ்கே ,விபி கூட்டணி கன்ஃபார்ம்
சிவகார்த்திகேயன் தற்போது ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.அதோடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ள தகவலை வெங்கட் பிரபுவே கூறியிருந்தார்.இந்த நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் இப்படம் கன்ஃபார்மாக உருவாகும். தற்போது திரைக்கதையை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. படத்திற்கு இசையமைக்க ஏ ஆர் ரகுமானிடம் பேசி வருகிறோம் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவன அதிபர் தியாகராஜன் கூறியுள்ளார்.