ரஜினியிடம் வாழ்த்து பெற்ற சிவாஜி பேரன்
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “லெனின் பாண்டியன்” .இந்த திரைப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிக்க,ஷ்ரீதா ராவ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, சுப்பு பஞ்சு ஆகியோருடன் நீண்ட இடைவெளி க்குப் பின் கங்கை அமரன் மற்றும் ரோஜா நடித்துள்ளார்.படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க,எட்வின் சக்காய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை தர்ஷன் கணேசன் மற்றும் படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Prev Post