Take a fresh look at your lifestyle.

கிறிஸ்டினா கதிர்வேலன் -விமர்சனம்

56

கிறிஸ்டினா கதிர்வேலன் -விமர்சனம்
கும்பகோணம் அருகே கிராமத்துஇளைஞரான கவுசிக், கல்லூரி மாணவியான பிரதீபாவை கண்டதும் காதல் வயப்படுகிறார். இதனால் அவர் படிக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அதன் பிறகு இருவரும் நட்பு உருவாகிறது. இருப்பினும் காதலை சொல்லவில்லை. இந்நிலையில் நண்பரின் காதலுக்கு உதவி செய்கின்றனர்.ஆனால் ரிஜிஸ்டர் ஆபீசிலிருந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சான்று வருகிறது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.அந்த சிக்கலில் மாட்டிக் கொண்டது எப்படி? அதில் இருந்து எப்படி மீண்டார்கள்?என்பதே படத்தின் மீதி கதை. கவுசிக் கிராமத்து பையனாக எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். பிரதீபா அழகால் கவர்வதோடு கிளைமாக்ஸில் கண்கலங்க வைக்கிறார். காதலுக்கு உதவும் போது ஏற்படும் விபரீத சிக்கல் குறித்து சொல்லி இருக்கிறார்இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்.மேலும் வழக்கறிஞராக வந்து கலகலப்பையும் ஏற்படுத்தி கதைக்கு மையப்புள்ளியாக உள்ளார். இருப்பினும் தேவையில்லாத வசனங்கள், காட்சிகள் படத்திற்கு பலகீனம்.ரகுநந்தனின் இசை,பிரகத் முனியசாமியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.