Take a fresh look at your lifestyle.

சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை

5

 

சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை ‘
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் எம்பி தயாரிக்கும் 9வது படம் வாணவேடிக்கை . இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்க,இயக்குனர் திரு இயக்குகிறார்.இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் பூஜை யுடன் துவங்கியது. இதல் பிரேமதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்ய,தயாரிப்பாளர் எல் கே சுதீஷ் மனைவி பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர் சுசீந்திரன், மோகன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன்,இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண்,ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி எஸ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடைபெற உள்ளது.