பிரபாஸின் ‘பௌசி பட ரிலீஸ் அப்டேட்
இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பௌசி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது பான் இந்திய படமான இது வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியில் அதிரடி திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதில் பிரபாஸிற்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இந்த திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.