அன்பே டயானா -விமர்சனம்
பெரம்பூர் பகுதியில் மாவு கடை நடத்தி வரும் ரோஜா, தனது ஜாதி மற்றும் தன் தெலுங்கு மொழி பேசும் குடும்பத் தில் சம்பந்தம் செய்ய ஆசைப்படுகிறார். ஆனால் அவரது மகன் பாரி இளவழகன் பள்ளியில் தன்னுடன் படித்த ஆங்கிலோ இந்திய பெண்ணான ரம்யா ரங்கநாதனை காதலிக்கிறார். தன் காதலை வீட்டில் சொன்னால் பிரச்சனை ஆகும் என சொல்லாமல் இருக்கும் பாரியின் காதல் கைகூடியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. ஜாதியையும், காதலையும், காமெடி கலந்து ஜாலியான பொழுதுபோக்கு படமாக இயக்குநர் பாரி இளவழகன் கொடுத் திருக்கிறார்.படத்தின் மிகப்பெரிய பலமே, சீரியசான விஷயத்தை கூட ஜாலியாக பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் கொடுத்தது தான். பாரி இளவழகன் இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் கவனம் ஈர்க்கிறார். ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ள ரம்யா ரங்கநாதன் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். அவரது கேரக்டரும், நடிப்பும் ரசிகர்களை கவர்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இப்படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ள நடிகை ரோஜாவின் நடிப்பு கதையை தாங்கிப் பிடிக்கிறது. தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார் சேத்தன். பரிதாபங்கள் கோபி, செல்முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி ஆகியோரும் தங்களது எதார்த்த நடிப்பை கொடுத்துள்ளனர். பெரம்பூர் பகுதி, அங்குள்ள மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி. அதேபோல் தனது பின்னணி இசை மூலம் படத்திற்கு உயிர் கொடுத்து உள்ளார் பரத் சங்கர்.
Prev Post
Next Post