Take a fresh look at your lifestyle.

சட்டமும் நீதியும் -விமர்சனம்

63

சட்டமும் நீதியும் -விமர்சனம்
தயாரிப்பு-ஜீ 5 ஒரிஜினல்
இயக்கம்-பாலாஜி செல்வராஜ்
நடிகர்கள்-சரவணன், நம்ரித்தா, அருள் டி. சங்கர், சண்முகம், தமிழ்செல்வன், விஜயாஸ்ரீ ,இனி யாராம்
வெளியீடு- ஜ5 ஓடிடி
ரேட்டிங்-2.75/5
கதைக்களம்
தன் மகளை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதை கண்டித்து பெரியவர் ஒருவர் நீதிமன்றம் முன்பு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த வழக்கை நோட்டரி பப்ளிக் வக்கீலான சரவணன் எடுத்து வாதாடுகிறார். முடிவில் சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமம். விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மேல்தட்டில் நடந்தாலும் அடித்தட்டில் நடந்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும் என்பதை சொல்கிறது இந்த கதை.
பிளஸ் & மைனஸ்
நீண்ட வருடங்களுக்குப் பிறகு வழக்கறிஞராக லீட் ரோலில் நடித்து ஸ்கோர் செய்துள்ளார் சரவணன். அவரின் உதவியாளராக வரும் நம்ரித்தா அழகான நடிப்பை தந்துள்ளார். மேலும் எதிர் தரப்பு கீழாக வரும் அருள் டி சங்கர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர்.
நீதிமன்ற கதையை ஒரு வெப் சீரிஸ் ஆக எடுத்து அதை ரசிக்கும்படியாக எட்டு எபிசோடுகளுடன் அழகாக கொடுத்துள்ளார் இயக்குனர் பாலாஜி செல்வராஜ். ஒரு சில இடங்களில் போலீஸ் மற்றும் அரசு வழக்கறிஞருக்கு முன்பாக இவர் சாட்சிகளை நெருங்குவது கொஞ்சம் சினிமா தரமாக உள்ளது. மற்றபடி ஒவ்வொரு எபிசோடும் ரசிக்கும் படியாக இருக்கிறது.
கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் கோர்ட்டு காட்சிகள் அழகாக உள்ளது. அதே போல் வைபின் பாஸ்கர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் படியாக உள்ளது.
சட்டமும் நீதியும்- அனைவருக்கும் சமம்