Take a fresh look at your lifestyle.

பன் பட்டர் ஜாம்- விமர்சனம்

71

பன் பட்டர் ஜாம்- விமர்சனம்
தயாரிப்பு-ரெயின் ஆப் ஆரோஸ் என்டர்டைன்மென்ட்
இயக்கம்-ராகவ் மிர்தாத்
நடிகர்கள்-ராஜு, ஆதியா, பவ்யா, விக்ராந்த், மைக்கேல், பப்பு, சார்லி, சரண்யா, தேவதர்ஷினி, லங்கேஷ்
ரேட்டிங்-3/5
கதைக்களம்
பள்ளிப் பருவத்தில் இருந்து நண்பர்களாக இருக்கும் ராஜு மற்றும் மைக்கேல் இருவரும் கல்லூரிக்கு செல்கின்றனர். கல்லூரியில் பவ்யாவை பார்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார் ராஜு. மற்றொருபுறம் சரண்யா- சார்லி தம்பதி தனது மகன் ராஜுவை, குடும்ப நண்பர்களான தேவதர்ஷினி- லங்கேஷ் மகளான ஆதியாவுக்கு திருமணம் செய்து வைக்க சில விஷயங்களை செய்கின்றனர்.
இறுதியில் ராஜு காதல் திருமணம் செய்தாரா? பெற்றோர் ஆசைப்பட்ட பெண்ணை திருமணத்தை செய்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

பிளஸ் & மைனஸ்
முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெண்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் ராஜு. பல காட்சிகளில் அவருடைய அசால்டான நடிப்பால் ரசிக்க வைத்துள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள பவ்யா மற்றும் ஆதியா இருவரும் அழகு பதுமையாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் பெறுகின்றன. அதே போல் விக்ராந்த் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். மைக்கேல் மற்றும் பப்பு இருவரும் தங்களது கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளனர். பெற்றோராக வரும் சரண்யா சார்லி தேவதர்ஷினி லிங்கேஷ் ஆகியோரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
இன்றைய 2கே கிட்ஸ் மற்றும் ஜென் சி கிட்ஸ் செய்யும் காதலை அழகாக திரையில் படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத். ஃபிரண்ட்,லவ்வர், பெஸ்டி என மூன்று விதமான அன்பை ஒன்றாக சேர்த்து பன் பட்டர் ஜாம் போன்று ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். ஒரு சில காட்சிகள் ஒட்டாமல் இருக்கிறது.
படத்திற்கு பெரிய பலமாக இருப்பது நிவாஸ் பிரசன்னாவின் இசை. பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
பன் பட்டர் ஜாம்-சுவை மிகுந்தது