Take a fresh look at your lifestyle.

சாரா என் மகள்: ஏ.எல்.விஜய் பெருமிதம்

76

சாரா என் மகள்: ஏ.எல்.விஜய் பெருமிதம்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த
‘தெய்வதிருமகள்’. படத்தில் குழந்தைசாரா என் மகள்: ஏ.எல்.விஜய் பெருமித
நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜூன். அவர் தற்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கி பாலிவுட் திரை உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார். ‘துரந்தர்’ படத்தில் ரன்பீர் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாரா இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு புதிய படவாய்ப்புகள் சாராவை தேடி வந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் அவரின் வளர்ச்சி குறித்து சினிமாவில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறுகையில், ‘சாரா எனக்கு மகள் போன்றவர். பெற்றோரிடம் இருப்பதைவிட என்னிடம் அதிகமாக இருந்தவர்.வாரத்திற்கு ஒரு முறையாவது இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
‘துரந்தர்’ படத்தை பார்த்து விட்டு சாராவிடம் அப்பா, அம்மா பெருமைஅடைந்திருப்பார்க ளே?’ என கேட்டேன். அதற்கு சாரா ‘நீங்களும் பெருமையடைந்திருப்பீர்களே?’ என கேட்டார். அவளை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது’ என்றார்.