முதலிடத்தைப் பிடித்த சாரா அர்ஜுன்
சர்வதேச திரைப்பட ஆய்வுத்தளமான ஐ.எம்.டி.பி. மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் முதல் இடத்தை நடிகை சாரா அர்ஜுன் பெற்றுள்ளார். 2011-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். தொடர்ந்து பல படங்களில் நடித்த சாரா, பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் இளம் வயது கேரக்டரில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். இந்தியில் சமீபத்தில் வெளியான துரந்தர் படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்த சாராவை இந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. இதன் மூலம் இந்திய அளவிலான பிரபலங்கள் பட்டியலில் அவர் முதலிடத்தை பெற்றுள்ளார்.
