தனுசுக்கு ஜோடியான சாரா ஆர்ஜூன்
நடிகர் தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்துள்ளார். அடுத்து லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் அவர் நடிக்கிறார். இது தனுஷின் 56-வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ருக்மணி வசந்த் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது, இப்படத்திலிருந்து ருக்மணி வசந்த் விலகியுள்ளார் .பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்கும் படத்திற்கு அதிக நாள்களை ஒதுக்கியதால் தனுஷ் 56 படத்திலிருந்து விலகியுள்ளாராம். தற்போது அவருக்கு பதிலாக ‘துரந்தர்’ படத்தின் ஹீரோயின் சாரா அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் மதுரையில் துவங்குகிறது.
Prev Post