ரியாலிட்டி ஷோவை வழிநடத்தும் சமந்தா
திரையுலகில் சமீப காலமாக டாப் லிஸ்டில் உள்ள ஹீரோயின்கள் தொடங்கி,முன்னாள் கதாநாயகிகள் வரை சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தாவும் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதுகுறித்து சமந்தா கூறியது, நான் இதுவரை இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்லை. அதனால் தான் இதில் பங்கேற்க சம்மதித்தேன். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தவறுகள் செய்வதையும் ஒருவரை ஒருவர் ஆச்சரியப்படுத்து வதையும் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. மேலும் பிரபலங்களின் மற்றொரு பக்கத்தை இந்நிகழ்ச்சியில் காணலாம் என்றார்.
Prev Post
Next Post
