யுவன் இசையில் வரிசை கட்டும் படங்கள்
2கே கிட்ஸ் முதல் ஜென் ஸி கிட்ஸ் வரை பேவரட் மியூசிக் டைரக்டராக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஆல்பங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தான் ரிலீஸ் ஆகும். ஆனால் தற்போது அவரது இசையில் வரிசையாக படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.
வரும் 21ம் தேதி யுவன் இசையமைத்துள்ள “பியார் பிரேமா கல்யாணம்”படம் நெட்பிளிக் ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இதை அடுத்து ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள “ஏழு கடல் ஏழு மலை” படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகப் போகிறது. இதற்கடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள “ஜாலியா இருந்த ஒருத்தன்”, யுவனின் பெரியப்பா மகன் ஜெயன் நாயகனாக அறிமுகமாகும் “ராஜாஸ் பிளே லிஸ்ட்”, பிரபுதேவா, வடிவேலு இணைந்து நடிக்கும் “பேங் பேங்” ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவை தவிர பத்திற்கும் மேற்பட்ட படங்கள் அவரது இசையில் உருவாகி வருகின்றன.
Next Post