தாக்க வந்த ரசிகரிடம் ஆக்சனில் இறங்கிய சாய் தன்சிகா
சாய் தன்ஷிகா நடிப்பில் யோகிடா படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் ஒரு பரபரப்பான விஷயத்தை கூறியுள்ளார்.அதில், ‘கதடி’ என்ற மலையாள பட ஹூட்டிங்கின் போது, சிலர் குடிபோதையில் வந்து என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்புவதாக கேட்டார்கள்.அவர்களிடம் என் மாமா நீங்கள் குடிபோதையில் இருக்கிறீர்கள். அதனால் இப்போது முடியாது என கூறினார். அவர்கள் கேட்காமல் வெளியே பிரச்சினை செய்ய தொடங்கினர்.இதனால் நான் டென்ஷனாகி அவரை கன்னத்தில் அறைந்து விட்டு கேரவனிற்குள் சென்று விட்டேன்.சிறிது நேரத்தில் அந்த ரசிகர் 6, 7 பேரை அழைத்துக் கொண்டு மீண்டும் வந்து பிரச்சினை செய்தார். பீர்பாட்டிலால் குத்த வந்தார்.இதனால் உச்சக்கட்ட கோபத்தில் அவர்களை அடிக்க தொடங்கினேன். 10 நிமிடம் கழித்து நான் சிறிது அமைதியான பிறகு பார்த்தால் என் இயக்குநரும் படத்தின் ஹீரோவும் என் கைகளையும் பிடித்துக் கொண்டிருந்தனர். நான் கற்றுக் கொண்ட தற்காப்புக்கலை அந்த நேரத்தில் எனக்கு உதவியது என்றார்.
Prev Post
Next Post