Take a fresh look at your lifestyle.

ரெட் லேபிள் -விமர்சனம்

128

ரெட் லேபிள் -விமர்சனம்
எம்எல்ஏவான ஆர்.வி.உதயகுமார் மகன் அஜய் கல்லூரியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து மற்றொரு மாணவர் நிற்கிறார். அவருக்கு முன்னாள் மாணவரான லெனின் துணை நிற்கிறார். இதனால் அஜய்- லெனின் இருவருக்கும் மோதல் உருவாகிறது. மற்றொருபுறம் கல்லூரியில் படித்து வரும் உதயகுமார் மகள் அஸ்மின், லெலினை காதலிக்கிறார். அவர்கள் காதல் விவகாரம் அஸ்மின் வீட்டிற்கு தெரிய வர கடும் எதிர்ப்பு ஏற்படுகிறது.இதனால் இருவரும் திருமணம் செய்ய முயற்சிக்கும் போது லெனின் எதிர் பாராமல் பெரிய பிரச்சினையில் சிக்கி கொள்கிறார். என்ன பிரச்சினை? அதிலிருந்து எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள லெனின் ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சியில் அசக்தி உள்ளார். ஹீரோயின் அஸ்மின் நடிப்பு அருமை. பொன்.பார்த்திபன், முனிஷ் காந்த் ஆகியோர் நடிப்பு கதைக்கு கூடுதல் பலம்.அனுமோகன் காமெடி கலகலப்பு. கைலாஷ் மேனன் இசை, சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. கல்லூரி தேர்தல் மற்றும் அங்கு நடக்கும் அரசியலை மையமாக கொண்டு ஆக்ஷன் கதை களத்துடன் திரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கே.ஆர். வினோத்.