சரிகமவின் லவ் ரிட்டர்ன்ஸ்
படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் சரிகம நிறுவனம் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது.உங்கள் முன்னாள் காதலியும் உங்கள் மனைவியும் அலுவலக நண்பர்களாக இருந்தால்? அந்த முன்னாள் காதலி உங்கள் வீட்டிற்கு வந்து தங்கினால் என்ன நடக்கும் என்ற கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் யூடியூப் குறுந்தொடர் தான் “லவ் ரிட்டர்ன்ஸ்”. கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த குறுந்தொடர் 12 எபிசோடுகளாக “சரிகம டைஸ் டிவி ஷோஸ் தமிழ் யூடியூப்” சேனலில் வரும் ஆகஸ்ட் 7 ம் முதல் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.இதில் நடிகை சைத்ரா ரெட்டி,
பர்வீன்,குரு லஷ்மண் நடிக்கின்றனர். பிரின்ஸ் இமானுவேல் தயாரிக்க,சதாசிவம் செந்தில்ராஜன் மற்றும் அர்ஜுன் இணைந்து இயக்கியுள்ளனர்.