Take a fresh look at your lifestyle.

‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் லுக்

48

‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் லுக்
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு, குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர், ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளனர். இவர்களுடன் ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் , ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி படமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.