சாய் பல்லவிக்கு பதில் ருக்மணி வசந்த்
பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இயக்குனர் கவுதம் தின்னனுரி இந்த பயோ பிக் படத்தை இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதன் ஆரம்பக்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் எம்.எஸ். சுப்புலட்சுமி கேரக்டரில் நடிக்க முதலில் சாய்பல்லவி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தற்போது சாய் பல்லவிக்கு பதிலாக ருக்மினி வசந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியா னது. இது குறித்து படக்குழு தரப்பில் விசாரித்த போது, ‘சாய்பல்லவி ராமாயணம் மற்றும் ஏற்கனவே கமிட்டான படங்களின் படப்பிடிப்புகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இதில் நடிக்க டேட்ஸ் தர முடியவில்லை என கூறினர்.எம்.எஸ்.சுப்புலட்சுமியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்
Next Post