Take a fresh look at your lifestyle.

மல்லுட்டில் கால் பதிக்கும் ரித்திகா சிங்

85

மல்லுட்டில் கால் பதிக்கும் ரித்திகா சிங்
மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் ராணுவப் பின்னணியில் உருவாகும் ஆபரேஷன் டிரால் படத்தில் இறுதி சுற்று படத்தின் மூலம் புகழ்பெற்ற ரித்திகா சிங், ஹீரோயினாக நடிக்கிறார். இதன் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன்பு துல்கர் சல்மானின் ‘கிங் ஆப் கோதா’ படத்தில் ஒரு சிறப்புப் பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இவர்களுடன் வினய் ராய், அமைரா தஸ்தூர், சித்திக், சாய் குமார், நந்து மற்றும் அன்சன் பால் ஆகியோரும் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.