எக்ஸாம் விமர்சனம்
இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அப்பாஸ், துஷாரா விஜயன், அதிதி பாலன் ஆகியோர் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகியுள்ள எக்ஸாம் வெப் சீரிஸ் விமர்சனம் இதோ, நடுத்தரவர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவுதான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல், அதனை ஒரு திரில்லர் மோடில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த எக்ஸாம். துஷாரா விஜயன் தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்.அதிதி பாலன் போலீஸ் அதிகாரி கேரக்டரில் கம்பீரமாக நடித்துள்ளார்.அப்பாஸ் கேரக்டர் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்து அதற்கு பரபரப்பான ஸ்கிரிப்ட் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் சற்குணம். இருப்பினும் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக எழுதி இருக்கலாமோ என தோன்றுகிறது. ரைட்டிங் இந்தத் தொடரின் மிகப்பெரிய பலவீனம். பல கேரக்டர்களின் முடிவுகள் தெளிவில்லாமல் இருக்கின்றன.சாம் சி.எஸ் பின்னணி இசை கூட பெரிதாகக் கவரவில்லை.
Prev Post