Take a fresh look at your lifestyle.

என் உயரம் தான் எனக்கு எதிரி:பூஜா பத்ரா

84

என் உயரம் தான் எனக்கு எதிரி:பூஜா பத்ரா
அஜித் நடித்த ஆசை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா பத்ரா. அதன் பின்னர் தெலுங்கு,இந்தி,மலையாளம் எனப் பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். சரத்குமார் நடித்த ஒருவன் படத்திலும் பூஜா பத்ரா நடித்திருந்தார். கடைசியாக தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார்.
அதன் பின்னர், இந்தி படங்களில் மட்டுமே ஆர்வம் செலுத்தி நடித்து வந்தார். 2021ம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு படத்திலும் அவர் கமிட்டாகவோ, நடிக்கவோ இல்லை. இந்த நிலையில் அவர் தனியார் செய்தி சேனலுக்குப் பேட்டியில், மாடலிங் துறையில் எனது உயரம் கொண்டாடப்பட்டாலும், சினிமாவில் அது எனக்குப் பெரும் சுமையாக மாறியது. என் உயரமே எனக்கு எதிரியாகி பட வாய்ப்புகள் குறைந்தது என்றார்.