Take a fresh look at your lifestyle.

மிரளவைக்கும் ராஷ்மிகாவின் மைசா’ டீசர்

1

அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் படமான ‘மைசா’ படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர்.”நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன் “என ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் டீசர் தொடங்குகிறது.கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக நடித்துள்ள ராஷ்மிகா, இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். பைக் ரேசிங் சாகசங்கள் முதல் ஆபத்தான நீருக்கடியிலான சண்டை காட்சிகள் வரை அனைத்திலும் துணிச்சலாக நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக, கையில் அரிவாளுடன் நீருக்கடியில் அவர் வீற்றிருக்கும் காட்சி ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணா வின் அசத்தலான ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜோயின் மிரட்டலான பின்னணி இசையும் டீசரை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நவம்பர் 27ம் தேதி படம் உலகம் வெளியாகவுள்ளது.