மர்மம்,பரபரப்பு நிறைந்த வெப் தொடர் ஆக்டோபஸ்
ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்டோபஸ் வெப் தொடர் ஜி5 ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 7 எபிசோடுகள் கொண்ட இதில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.ஒரு இளம் பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அந்த உண்மையை கண்டறிய அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். இந்த தேடல், மறைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வர வழிவகுக்கிறது. அதன் பிறகு நடக்கும் மர்மம், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு இக்கதை நகர்கிறது.
Prev Post
