டெல்லியில் நடந்த ‘ராமாயணம்’ அறிமுக விழா
பிரபல பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ராமாயணம் படத்தின் டிரெய்லர் ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு இப்படத்தின் பிரத்யேக முதல் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்த நிகழ்வு ‘பிரதம் சங்கல்ப்’ எனும் பெயரில் நடந்தது. இந்த நிகழ்வில் ரன்பீர் கபூர்(ராமர்), சாய் பல்லவி(சீதை), யாஷ்(ராவணன்),சன்னி தியோல் (அனுமன்), அருண் கோவில் (மன்னர் தசரதர்), ஷோபனா (கைகேயி), அஜிங்க்யா தேவ் (விஸ்வாமித்திரர்), குனால் கபூர் (இந்திர தேவன்), ரகுல் ப்ரீத் சிங் (சூர்ப்பணகை), ரவி துபே (லட்சுமணன்) மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த படத்தை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா மற்றும் நடிகர் யாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
Prev Post
Next Post