காஜல் அகர்வால் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்
சேத்தன் டி.கே. இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள படம் தி இந்தியா ஸ்டோரி. இந்தப் படத்தை சாகர் பி. ஷிண்டே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.மங்கேஷ் தாக்டே இசையமைத்துள்ளார். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்துகளில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தொடர்பாகவும், அதுசார்ந்த நிர்வாக ஊழல் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், நேற்று டிரைலர் வெளியானது. டீசரே பரபரப்பை தூண்டிய நிலையில் ட்ரெய்லர் அதை இன்னும் பன்மடங்காக உயர்த்தி உள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வரும் 24ம் தேதி வெளியாகிறது.
Prev Post
Next Post