அருள்வான் விமர்சனம்:
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் அந்த மலைவாழ் மக்கள் கல்வி அறிவின்றி வாழ்கின்றனர். அங்கு விவசாயம் செய்து வரும் ஆரவ் ,ரம்யா பாண்டியனின் மகள் கிருத்திகா கல்வி கற்பதற்காக பெரும் போராட்டத்தில் இறங்கி கலெக்டர் அருள்நிதியை சந்திக்க நகரத்திற்கு வருகிறார் அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகிறார் அதன் பிறகு என்ன ஆனது ? அருள்நிதி அந்த சிறுமிக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதி கதை. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி இந்த காலகட்டத்திலும் மலைவாழ் மக்களுக்கு கல்வி போய் சேரவில்லை என்கிற கதை கருவை மையமாக வைத்து ஒரு விழிப்புணர்வு படமாக இயக்குனர் கணேஷ் விநாயகன் இதை இயக்கியுள்ளார். கலெக்டர் முத்துவேலாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் அருள்நிதி ஒரு கலெக்டரின் பொறுப்பு என்ன என்பதை திரையில் காட்டியுள்ளார் . ஆரவ்,ரம்யா பாண்டியன் இருவரும் மலைவாழ் மக்களாகவே வாழ்ந்துள்ளனர். கதையின் உயிர்நாடியாக உள்ள கிருத்திகாவின் நடிப்பு பாராட்டுக்குறியது. மேலும் ஜான் விஜய் காளி வெங்கட் வீட்டு வி. கணேஷ் ஆகியோரின் நடிப்பு கதைக்கு பலம். சுகுமாரின் ஒளிப்பதிவு மற்றும் ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பிளஸ்.