Take a fresh look at your lifestyle.

பிரதீப் இயக்கம் அடுத்த படம்: யார் ஹீரோ தெரியுமா?

193

பிரதீப் இயக்கம் அடுத்த படம்: யார் ஹீரோ தெரியுமா?
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் ஹீரோவாக நடித்தார்.அவர் ஹீரோவாக நடித்த இரண்டு படங்களுமே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே மற்றும் கீர்த்திஸ்வரன் இயக்கும் டியூட் ஆகிய படங்களில் அடுத்து வருகிறார்.
லவ் டுடே படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த பிரதீப், தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க இருக்கிறார். அதில் ஹீரோவாக முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.