பிரதீப் ரங்கநாதனின் அடுத்த அவதாரம்
தமிழ் திரை உலகில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதன் அடுத்து தயாரிப்பாளராகவும் களமிறங்குகிறார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக வெற்றி பெற்ற பிரதீப், லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களில் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் முன்னணி நடிகராகவும் மாறி உள்ளார்.இந்நிலையில் அவரின் இணை இயக்குனர் இயக்கும் படத்தை பிரதீப் ரங்கநாதன் தயாரிக்க இருக்கிறார். இதில் ஹீரோயின் ஆக மமிதா பைஜு நடிக்க உள்ளார் எனவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் கசிந்து உள்ளது.
Prev Post