Take a fresh look at your lifestyle.

இளையராஜா இசையில் உருவான “அந்தோணி”

146

இளையராஜா இசையில் உருவான “அந்தோணி”
இலங்கையில் நடந்த போருக்கு பின்னர் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் ‘அந்தோனி’. இந்த படத்தை ஜெனோசன், சுகிர்தன் ஆகிய இரண்டு அறிமுக இயக்குநர்கள் இயக்கி உள்ளனர். இதில் கயல் வின்சென்ட், டி.ஜே. பானு ஆகியோர் லீட் ரோலில் நடிக்க, சவுமி, சுதர்ஷன்,அருள்தாஸ், நிழல்கள் ரவி, அரவிந்தன் உள்பட பலர் நடித்துள்ளனனர். படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இலங்கை யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. ஒசை பிலிம்ஸ் தயாரிப்பில் வாழ்வியல் கலந்த அழகான காதல் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.