போட்டோகிராபர்- விமர்சனம்
அரிய வகை மரம் ஒன்றை புகைப்படம் எடுக்க மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்கிறார் போட்டோகிராபரான அஷ்ரப், அப்போது வழி தவறி யாரும் திரும்பி வராத ஆபத்தான காட்டுப் பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து வெளிய வர முயற்சிக்கும் அவர் இயற்கை சீற்றம், மர்மமான சம்பவங்கள் மற்றும் உளவியல் ரீதியான பல சோதனைக ளை எதிர்கொள்கிறார்.அந்த காட்டிலிருந்து அஷ்ரப் உயிருடன் மீண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இப்படத்தின் கதையை எழுதி, இயக்கியது டன் ஹீரோவாகவும் நடித்துள்ளார் அஷ்ரப், ஒரு மனிதனின் தனிமையான உயிர் பிழைப்பு போராட்டத்தை வித்தியாசமாக சொல்லி உள்ளார். முதல் பாதியில் அவரது நடிப்பு சற்று செயற்கையாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் கதையின் தீவிரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.கதாநாயகியாக நடித்திருக்கும் ஜனனி சமாதானம், இரண்டு காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்கிறார். நண்பராக வரும் கருணாகரன், அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோருக்கும் அதே நிலைதான். ரயீஷ் அஹ்மத் ஒளிப்பதிவு, ராஜ்குமார் சந்திரேசகரன் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம்.
