Take a fresh look at your lifestyle.

கடிக்க வந்த நாயிடம் கருணை காட்டிய ரவீனா டாண்டன்

1

கடிக்க வந்த நாயிடம் கருணை காட்டிய ரவீனா டாண்டன்
பாலிவுட் நடிகையான ரவீனா டாண்டன் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தமிழில் சூர்யாவுடன் விஸ்வநாத் அண்டு சன்ஸ் படத்தில் நடித்துள்ளார். அத்தோடு இந்தியில் ‘ஓ மை டாக்’என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று முன்தினம் ரிலீசானது. இதை ஒட்டி மும்பையில் நடந்த படத்தின் சிறப்பு காட்சியில் நடிகை ரவீனா டாண்டன் பங்கேற்றார்.அப்போது படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நாயுடன் அவர் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.திடீரென நாய் கடுமையாக குரைத்தபடி ரவீனா டாண்டனை கடிக்க முயன்றது. அந்த நேரம் அவர் அணிந்திருந்த ஆடையின் நூல்,நாய் வாயில் சிக்கியது.இதைப் பார்த்த ரவீனா கொஞ்சமு ம் பயப்படாமல் அந்த நாயை அன்போடு தடவி கொடுத்து அமைதிப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.