Take a fresh look at your lifestyle.

“ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

94

“ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம் “ஓ காட் பியூட்டிஃபுல்”.பேண்டஸி, பேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தை பரிதாபங்கள் புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அதில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது. கோபியின் கையில், அரிச்சந்திரன் எழுதிய பொய் சொல்வது எப்படி என்கிற புத்தகம் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.