Take a fresh look at your lifestyle.

பாலிவுடில் மரியாதை இல்லை: சிம்ரன் வேதனை

73

பாலிவுடில் மரியாதை இல்லை: சிம்ரன் வேதனை
தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகையான சிம்ரன் அளித்த சமீபத்திய பேட்டியில்,இந்தி பட வாய்ப்புகளை நான் பலமுறை மறுத்து இருக்கிறேன். காரணம் தென்னிந்திய திரை உலகில் நாங்கள் செய்த பணிகளை பாலிவுட் திரை உலகில் பார்ப்பதில்லை. இது எனக்கு வருத்தமாக உள்ளது.அங்கு மரியாதை என்பதே இல்லை. என் வாழ்நாளில் பாதிக்கும் மேல் நான் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தும் எனக்கு மரியாதை கிடைக்க வில்லை என்கிற போது அது வலிக்கிறது. சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்கும் இட விஷயத்தில் கூட பேரம் பேசுகிறார்கள். என்னுடன் வரும் நபர்கள் பற்றி கேள்வி கேட்பார்கள். உங்களுடன் இத்தனைபேரை அழைத்து வரக்கூடாது என சொல்வார்கள்.ஓட்டல்கள் பயண டிக்கெட்டுகளில் கூட பேரம் நடக்கும் என்றார்.