கருப்பு டிரெய்லர் ரிலீஸ் எப்போது?
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கருப்பு’. இப்படம் வரும் 14-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்து இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,‘கருப்பு’ படம் 14-ந்தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்பு டிரெய்லர் வெளியிட வேண்டும். ஆனால் ஆசையோடு நாம் வாக்களித்து மகிழ்ச்சியோடு இருந்த நேரத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எதிர்பாராமல் சில திருப்பம் ஏற்பட்டுள்ளது. எல்லாம் முடிந்து நாம் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடக்கட்டும். அரசியலில் ஒரு தெளிவு வந்ததும் உங்களுக்கு நன்றாக பிடிக்கக் கூடிய படத்தின் டிரெய்லர் வெளியாகும்.
Next Post