மதுரையில் புரோட்டா போட கற்றுக் கொண்ட நித்யா மேனன்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்துள்ள படம் `தலைவன் தலைவி’ . இப்படம் வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தனது கேரக்டர் குறித்து நித்யா மேனன் கூறியது,
இதில் என்னுடைய கேரக்டர் பெயர் பேரரசி. இதைப் பற்றி இயக்குநர் எனக்கு விவரித்த போது, இதை நம்மால் சரிவர செய்துவிட முடியுமா என்று யோசித்தேன். உடனே இயக்குனர் `பேரரசி எல்லோர் வீட்டிலும் இருக்கிற பெண்தான். நீங்கள் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.
உடனே தைரியமாக ஒத்துக் கொண்டேன். பேரரசி ஹோட்டலுக்காக மதுரையில் உள்ள பரோட்டா கடை ஒன்றில் பரோட்டா போட ஒரு வாரம் கற்றுக் கொண்டேன் என்றார்.
Prev Post
Next Post