திவ்யா கேரக்டர் குறித்து மனம் திறந்த நிமிஷா சஜயன்
நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம் ‘டிஎன்ஏ’.இதில் அதர்வா,நிமிஷா சஜயன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். மேலும் மானசா சவுத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், சேத்தன், விஜி சந்திர சேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைக்க, அம்பேத்குமார் எம் எல் ஏ படத்தை தயாரித்துள்ளார்.வரும் 20-ந் தேதி படம் வெளியாகிறது.இதையொட்டி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற நிமிஷா சஜயன் பேசியது, டி என் ஏ எனக்கு ஸ்பெஷலான படம். முதலில் இயக்குனர் இந்த கதையை சொன்னதும் தயங்கினேன். திவ்யா கேரக்டரில் நடித்தது சவாலாக இருந்தது. தற்போது திரையில் பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக உள்ளது. என்னுடன் நடித்த அதர்வா திறமையான நடிகர். ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு மேஜிக் செய்துள்ளார் என்றார்.
Prev Post