Take a fresh look at your lifestyle.

ரிவால்வர் ரீட்டாவை நம்பும் கீர்த்தி சுரேஷ்

119

ரிவால்வர் ரீட்டாவை நம்பும் கீர்த்தி சுரேஷ்
ஜே.கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ரிவால்வர் ரீட்டா. தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது. இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா படம் தோல்வி அடைந்ததால், ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். திருமணத்துக்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.