Take a fresh look at your lifestyle.

நயன்தாரா தான் என் இன்ஸ்பிரேஷன் சொல்கிறார் ஐஸ்வர்யா .கே‌.எஸ்

156

 

நயன்தாரா தான் என் இன்ஸ்பிரேஷன் சொல்கிறார் ஐஸ்வர்யா .கே‌.எஸ்
சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில் கவனம் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா.கே‌எஸ். சிறுவயது முதலே நடனம் கற்றுக் கொண்டு, கலை மீது ஆர்வம் இருந்தாலும், விளையாட் டிலும் தன் திறமையை நிரூபித்துள்ளார். தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடி பரிசு, சான்றிதழ் பெற்றுள்ளார். கோவிட் காலத்தில் கிடைத்த ஒரு குறும்பட வாய்ப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அதனை தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளின் மூலம், இன்று அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அடுத்ததாக நடிகர் நட்டி நட்ராஜ் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதோடு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் புதிய படங்களிலும் அவர் கமிட்டாகியுள்ளார். சிறு வயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகையான அவர், தனது இன்ஸ்பிரேஷன் நயன்தாரா தான் என கூறியுள்ளார்.