Take a fresh look at your lifestyle.

என் சம்பளம் டபுளா: சசிகுமார் மறுப்பு

59

என் சம்பளம் டபுளா: சசிகுமார் மறுப்பு
சத்ய சிவா இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃப்ரீடம் ஆகஸ்ட் 15. இதில் விஜோமோல் ஹீரோயினாக நடித்துள்ளார்.இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பி வந்த தமிழர்களின் வலியை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் 10-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.இதையொட்டி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சசிகுமார் பேசியது, எனது பட புரமோஷன் நிகழ்ச்சிகளை கல்லூரிகளில் நடத்தி மிஸ் யூஸ் பண்ண எனக்கு விரும்பவில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றி பெற்றதால் என் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக சொல்கின்றனர். அப்படி எதுவும் இல்லை. நிச்சயம் நான் உயர்ந்த மாட்டேன்.