“வாழ்க்கைனா என்னனு தெரியணுமா”: நயன்தாராவே சொன்னது இது!!
இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியாகிய “பறந்து போ” படத்தை பார்த்தவர்கள் குழந்தை வளர்ப்பு குறித்த சிறந்த படம் என பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா படத்தைப் பார்த்துவிட்டு தனது இஸ்டா ஸ்டோரியில் கூறியது ,இந்த பரபரப்பான உலகை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மலை ஏறுங்கள் அல்லது குழந்தைகளை பறந்து போ படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை, நாம் வாழ்வில் எதை இழக்கிறோம் என்பதை அழகாக சொல்லியுள்ளது இத்திரைப்படம். நீங்கள் ஒரு சிறந்த இயக்குனர் ராம். சிவா, கிரேஸ் ஆண்டனி,அஞ்சலி ஆகியோருக்கு எனது பாராட்டுகள் என கூறியுள்ளார்.