Take a fresh look at your lifestyle.

மை டியர் டாலி- விமர்சனம்

91

மை டியர் டாலி- விமர்சனம்
அனுபமா டீம் லீடர் ஆக வேலை செய்யும் அதே ஐடி நிறுவனத்தில் விஜே பப்புவும் வேலை செய்கிறார். அங்கு அனுபமாவை ஒன் சைடாக காதலிக்கும் விஜே பப்புவுக்கு, அவர்கள் வீட்டில் பெண் பார்க்ககின்றனர். பெற்றோருக்காக பெண் பார்க்க போனால் அங்கு அனுபமா பெண்ணாக நிற்கிறார். இதனைத் தொடர்ந்து திருமண ஆசை இல்லாத அனுபவமாவை, ஆறு மாதத்தில் பிரிந்து விடலாம் என்ற அக்ரிமெண்ட் உடன் திருமணம் செய்து கொள்கிறார் பப்பு. 6 மாதத்துக்கு பிறகு என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை. இன்றைய இளசுகளுக்கு காதல் என்பது வெறும் ‘ஐ லவ் யூ’ அல்ல, பொறுமை, புரிதல், தியாகம் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அரவிந்த்ராஜ்.
ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே ரொம்ப மெச்சூரான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அனுபமா மாறுபட்ட கேரக்டரில் கவர்கிறார். குறிப்பாக 2-ம் பாதியில் ‘பொம்மையாக’ மாறி அசத்தியுள்ளார். பாலாஜி சேகர் ஒளிப்பதிவு,பாசில் இசை ரசிக்க வைக்கிறது.