பிரியதர்ஷன் 100வது படத்தில் மோகன்லால்
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் அவரின் 100-வது படத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்து பிரியதர்ஷன்கூறியது, ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் கதை. படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது.முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக வணிக ரீதியில் உருவாகும் இதில் 12 பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் இடம் பெறுகிறது. படத்தில் தந்தை, மகன் இருவரும் கர்நாடக இசைப் பாடகர்கள்.மோகன்லாலின் தந்தை கேரக்டரில் நடிக்க ஒரு புது முகத்தை தேடிக் கொண்டுள்ளோம். அவருக்கு கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி தெரிந்திருக்க வேண்டும் என்றார்.
Prev Post
Next Post