29 படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
பிரபல இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள படம் “29”. பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.விஜய் பாண்டி வாங்கி யுள்ளார்.தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், தரமான தயாரிப்புகளையும் வழங்கி வரும் இந்நிறுவனம் தனது அடுத்த முக்கிய வெளியீடாக 29 படத்தை வெளியிட தயாராகியுள்ளது. இப்படம் வரும் மே 8 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீசாக உள்ளது.இந்நிறுவனம் இதற்கு முன்பு தேஜாவு , வித்தைக்காரன் படங்களை தயாரித்து கவனம் பெற்றது. அதோடு அஜித்தின் “துணிவு” மற்றும்“ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளது.
Prev Post
Next Post