கதை நாயகியாக கலக்கும் மிஷா கோஷல்
தி செய்லர்மேன் பிக்சர்ஸ் சார்பில் எல்.கார்த்திகேயன் தயாரித்து பிரியா கார்த்திகேயன் இயக்கி உள்ள சுயாதீன படம் ‘பேரடாக்ஸ்’. துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். பைசல் வி.காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைத்துள்ளார். படம் ஓடிடியில் வெளியாகிறது.சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தில் நாயகியின் தங்கையாக அறிமுகமானவர் மிஷா கோஷல். அதன்பிறகு நான் மகான் அல்ல, 180, 7ம் அறிவு, முகமூடி, ராஜா ராணி, வணக்கம் சென்னை, வடகறி, விசாரணை, குற்றம் 23, மெர்சல், லத்தி, ரத்தம் உள்ளிட்ட படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார். தற்போது அவர் கதையின் நாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார்
