குத்து பாடலுக்கு நடனமாடிய மிருணாள்
சீதா ராமம் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இந்த படத்துக்கு பிறகு ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ள அவருக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக மிருணாள் தாக்கூர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள பெத்தி படத்தில்குத்துப் பாடல் ஒன்றுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். ஏற்கனவே புஷ்பா படத்தில் சமந்தாவும், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீ லீலாவும் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி உலக புகழ் பெற்றனர். அந்த வகையில் மிருணாள் தாக்கூரும் இதில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Prev Post
Next Post