Take a fresh look at your lifestyle.

கிளாமருக்கு மீட்டர்: கயாடு லோகரின் பீட்டர்…

2

கிளாமருக்கு மீட்டர்: கயாடு லோகரின் பீட்டர்…
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கயாடு லோகர். அதனைத் தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் அவர் கமிட்டானார். கடந்த வாரம் வெளியான இதய முரளி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதோடு ஜிவி பிரகாஷ் உடன் இம்மோர்ட்டல், மாரி செல்வராஜ் இயக்கம் மஞ்சனத்தி, சூர்யாவின் 48வது படம் என வரிசையாக தமிழில் நடிக்கிறார். அதேபோல் மலையாளத்தில் தாரம், ஐ அம் கேம் மற்றும் தெலுங்கில் தி பாரடைஸ் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில், இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லும் போது கிளாமர் காட்சிகளில் எனது லிமிட் இதுதான் என சொல்லிவிடுகிறேன். அதைத் தாண்டி எனக்கு உடன்பாடு இல்லாத காட்சிகளை எடுத்தால் வெளிப்படையாக இயக்குனர் இடம் சொல்லி விடுவேன். என் லிமிட்டை தாண்டி நடிக்க மாட்டேன் என்றார்.