Take a fresh look at your lifestyle.

ஹார்ஸ் ட்டிரைனிங்கில் மஞ்சு வாரியார்

75

ஹார்ஸ் ட்டிரைனிங்கில் மஞ்சு வாரியார்
நடிகை மஞ்சு வாரியார் மலையாள மொழி படங்கள் மட்டுமன்றி, தமிழ் தெலுங்கு இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார். வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த இவர் சமீபத்தில் வெளியான மிஸ்டர் எக்ஸ் படத்தில் ஆர்யாவுடன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.நீண்ட தூரம் பைக்கில் பயணம் ஆர்வம் கொண்ட மஞ்சு வாரியர் தற்போது குதிரையேற்ற பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் ஆலுவா மணப்புரத்தில் கடந்த ஒருமாதமாக குதிரை ஏற்ற பயிற்சி எடுத்து வருகிறார்.அவருக்கு ஜார்ஜ் பயஸ் என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். லோரா என்ற பெண் குதிரையில் தினமும் அதிகாலையில் பயிற்சி செய்து வருகிறார்.